கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.. கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் திறந்து வைத்தார்.. ரூ.208.50 கோடியில் 45 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த பூங்கா வளாகத்தில் செயற்கை மலைக் குன்று, அதில் இருந்து கொட்டும் நீர் வீழ்ச்சியும் அமைக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த பூங்காவில் கடையேழு வள்ளல்களின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது..
இந்த செம்மொழிப் பூங்காவில் 23 வகையான தோட்டங்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள், படிப்பகம் அமைந்துள்ளது.. செம்மொழி பூங்காவில் சிறார்களை மகிழ்விக்க 14,000 சதுர அடி பரப்பளவில் விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த பூங்காவில் மாற்று திறனாளிகளுக்காக பிரத்யேக விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.. செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி வனம், மூலிகை தோட்டம், புதிர் தோட்டம், ஆரோக்கிய வனம், நீர் வனம், மலைக்குன்று உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்..
500 பேர் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், திறந்தவெளி உடற்பயிற்சி கூடமும் இந்த செம்மொழிப் பூங்காவில் இடம்பெற்றுள்ளது.. இந்த பூங்காவின் நுழைவுக் கட்டணம் ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. கோவையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் இயற்கை அருங்காட்சியகம், திறந்தவெளி அரங்கம், இயற்கை உணவகம், செயற்கை மலை, கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.. இந்த பூங்காவுக்கு நடுவே சர்வதேச மாநாட்டு மையம், சர்வதேச கருத்தரங்கு மையம் என மக்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது..
Read More : கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்து…!



