சென்னை நந்தனத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளது.. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது.. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.. இந்த மாநாட்டில் முதல்வர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து அமைச்சர் ஏ.வ. வேலு தெரிவித்துள்ளார்..
இந்த மாநாட்டில் பேசிய அவர் “ ஒப்பந்ததாரர்கள் மாநாடு என்று சொன்ன உடனே, இந்த மாநாட்டிற்கு வாழ்த்த வருகிறேன் என்று ஒப்புதல் தந்தார்.. நேற்று பீகாரில் நடந்த ஒரு ஜனநாயக போராட்டத்தில் கலந்து கொண்டார்.. பீகாரில் இருந்து திரும்பிய பிறகு முதல்வருக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.. அதனடிப்படையில் தான், துணை முதல்வரை அனுப்பி வைத்திருக்கிறார்..” என்று தெரிவித்தார்..
முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 21-ம் தேதி தலைசுற்றல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அவருக்கு பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு இதயத்துடிப்பில் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு இதய துடிப்பை சீராக வைத்துக்கொள்ள உதவும் பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்ட. மருத்துவர்கள் அவரின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் அவர் கடந்த மாதம் 27-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : பேட்ச்வொர்க் மாடல் முதல்வர் ஸ்டாலின்.. ரூ.6000 கோடி முதலீடு என்ன ஆனது? அண்ணாமலை சரமாரி கேள்வி..!