முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!… கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

Stalin: விளையாட்டை விரும்பும் கோவை மக்களுடன் இணைந்து கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ரசிகன் என்ற முறையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூடுதலாக ஒரு வாக்குறுதியை சேர்த்து கொள்கிறேன். விளையாட்டை விரும்பும் கோவை மக்களுடன் இணைந்து கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மேற்கோள்காட்டியபடி, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்தபடியாக கோவையில் அமைய உள்ள மைதானம் தமிழகத்தின் 2-வது சர்வதேச மைதானமாக அமையும். விளையாட்டு திறனை ஊக்குவிப்பதிலும், தமிழகத்தில் விளையாட்டு துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், தமிழக அரசும் உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Readmore: +92 எண்களில் போன் வருதா?… மொபைல் பயனர்களுக்கு எச்சரிக்கை!

Kokila

Next Post

”ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாகவே வைத்திருக்கும் திமுக”..!! அண்ணாமலை பாய்ச்சல்..!!

Mon Apr 8 , 2024
திமுக அரசு ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாக வைத்திருக்கிறார்கள். அவர்களை ஓட, ஓட விரட்ட வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று காலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வடுகபாளையம் புதூர் பிரிவு பகுதியில் அவர் வாக்காளர்கள் மத்தியில் பேசுகையில், ”அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க […]

You May Like