தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. மேலும் தேர்தல் களத்தில் புதிதாக களமிறங்கி உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.. என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.. குறிப்பாக விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார்? விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? இல்லை அதிமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? போன்ற கேள்விகளும் எழுந்துள்ளது..
இந்த சூழலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது.. இந்த முடிவுகளில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்திருந்தன.. ஒரு கருத்துக்கணிப்பு மட்டும் விஜய் வெற்றி பெற்று ஆட்சியமைப்பார் என்று கூறியிருந்தது.. மேலும் ஒரு கருத்துக்கணிப்பு மட்டும் தொங்கு சட்டசபை வரும் என்றும், ஒரு கருத்துக்கணிப்பு அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என்றும் கணித்திருந்தது..
இந்த நிலையில் இசைஞானி இளையராஜா விஜய் புகைப்படத்துடன் ஒரு பாடலை பகிர்ந்துள்ளார்.. எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய இது எங்கள் நீதி’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடலை அவர் பகிர்ந்துள்ளார்.. இந்த படத்தில் ராதிகா, ராம்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.. சின்னத்தம்பி உன்னை நம்பி காத்திருக்கும் இந்த நாடு என்று தொடங்கும் பாடலை இளையராஜா தனது யூ டியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.. சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரும் 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இளையராஜா பகிர்ந்துள்ள இந்த பாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..



