கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் இந்த உணவுகளை தொடவே கூடாது..!! மீறினால் என்ன ஆகும் தெரியுமா..?

உங்கள் உணவு முறை சரியாக இருந்தால், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட அவசியமில்லை. இருப்பினும், சில சமயங்களில் அந்த உணவுகள் உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தாலும் அதன் தோற்றமும், சுவையும் நம்மை சாப்பிட வைத்துவிடும். இந்த உண்ணும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும்போது அது உடல் நலத்தில் ஆபத்தை உண்டாக்குகிறது. குறிப்பாக கொழுப்பு பரவலாக உடலில் சேர ஆரம்பிக்கிறது. இதை நாள் கணக்கில் கண்டுகொள்ளாமல் விட்டால், உயிருக்கே மோசமாக மாறிவிடுகிறது. அப்படி கொழுப்பு அதிகரிப்பை உண்டாக்கும் உணவுகளும், அதனால் வரும் ஆபத்துகளை பற்றியும் இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

சிவப்பு இறைச்சி எப்பொழுதும் கொலஸ்ட்ராலுக்கு கேடு என்று கருதப்படுகிறது மற்றும் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பில் பாதிப்பு ஏற்படாத வகையில் சிவப்பு இறைச்சியை சாப்பிட வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. “மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி போன்றவை நிறைவுற்ற கொழுப்பு கொண்டவை.

ஹாம்பர்கர், விலா எலும்புகள், பன்றி இறைச்சி சாப்ஸ் மற்றும் ரோஸ்ட் போன்ற இறைச்சியில் அதிக கொழுப்பு இருக்கிறது. நீங்கள் அதற்காக இறைச்சியை முழுவதுமாக தவிர்க்க வேண்டியதில்லை. எப்போதாவது மட்டும் சாப்பிடுங்கள். தோல் இல்லாத கோழி அல்லது வான்கோழி மார்பக கறி, மீன் போன்ற நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ள இறைச்சியை உட்கொள்ளுங்கள்” என்று ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, அதிக கொலஸ்ட்ரால் கொண்ட நோயாளிகள் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் பெரும்பாலும் இறைச்சியின் கொழுப்புகளையே பயன்படுத்துகின்றனர். எனவே, அதிக அளவு கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு ஆபத்தில் முடியும். இது ஏற்கனவே அதிக கொழுப்பு உள்ளவர்களின் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

பலரால் மொறுமொறுப்பான வறுத்த உணவுகள் சாப்பிடுவதை நிறுத்த முடியாது. அதிலும், எண்ணெயில் நன்கு வறுத்த உணவுகளை உட்கொள்வது தவறு என எச்சரித்துள்ளனர். அவர்கள் சொல்வது போல், நன்கு வறுக்கப்படுவது உணவை சாப்பிடும்போது ஆற்றல் அடர்த்தி அல்லது கலோரி எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதற்கு மாற்றாக வறுத்த உணவை சாப்பிட ஏர் பிரையர் அல்லது ஆரோக்கியமான எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.

பலருக்கு, குக்கீகள் மற்றும் பேஸ்ட்ரிகள் அதீத ஈர்ப்பு இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த இனிப்பு உணவுகளை சிற்றுண்டியாகவோ அல்லது ஆசைப்பட்டு சாப்பிட விரும்புகின்றனர். வியக்கத்தக்க அளவு வெண்ணெய், மற்றும் சர்க்கரை மனித உடலுக்கு எந்த நன்மையும் செய்யாது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, இரத்தத்தில் ஏற்கனவே கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்திருப்பவர்களுக்கு இது எதிர்பாராத எதிர்கால பேரழிவை உருவாக்குகிறது.

Read More : நுரையீரலை பாதுகாக்கவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்..!! இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

Chella

Next Post

மாதம் ரூ.85,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..!! டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Thu Apr 25 , 2024
RITES நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், Individual Consultant பணிக்கான 8 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணியிட விவரம்… நிறுவனம் – RITES பணியின் பெயர் – Individual Consultant பணியிடங்கள் – 8 விண்ணப்பிக்க கடைசி தேதி – 06.05.2024 விண்ணப்பிக்கும் முறை – Online காலிப்பணியிடங்கள்: Individual Consultant பணிக்கென காலியாக […]

You May Like