விஜயின் அரசியல் வருகையை உறுதி செய்யும் விதத்தில்…..! ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு…,!

நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதத்திலும், நலத்திட்ட உதவிகள் செய்வதில் ஈடுபடும் விதத்திலும் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார் விஜய் மக்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் கடத்த உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சிலர் வெற்றிப்பெற்றனர்.


இந்த நிலையில், விஜயின் அரசியல் வருகையை உணர்த்தும் விதத்தில் போஸ்டர்களை ஒட்டி அதை சமூக வலைதளங்களில் பரப்பும் வேலைகளை மதுரையைச் சார்ந்த விஜயின் ரசிகர்கள் பல வருட காலமாக செய்து வருகிறார்கள் சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு அவர் கல்வி விருது வழங்கிய செயலை அவருடைய ரசிகர்கள் அரசியல் வருகை சார்ந்த செயல்பாடாகவே பார்க்கிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அவருடைய மதுரை ரசிகர்கள் நகர் பகுதிகளில் அவரது அரசியல் வருகையை உறுதி செய்யும் விதத்தில், ஆங்காங்கே பல்வேறு போஸ்டர்கள் ஒட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 2026 தமிழக முதல்வரே, எங்கள் தலைமுறையை தலைநிமிர்த்திய தலைவனே, நாளைய தமிழகம் காத்திருக்கிறது அண்ணா உள்ளிட்ட வசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளனர்.

Next Post

அடடே..!! இனி எல்லாமே மாற்றம்தாம்..!! இவ்வளவு வசதிகளா..? போக்குவரத்துக்கழகம் சூப்பர் முடிவு..!!

Tue Jun 20 , 2023
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக விரைவு பேருந்துகளில் அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சிறப்பாக செயல்பட்டாலும் பேருந்துகள் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் அதிநவீன பேருந்துகள் போக்குவரத்துக்கு பயன்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக நவீன பேருந்துகள் வாங்கப்படுவது குறைவாகவே உள்ளது. கர்நாடகாவில் இருக்கும் அரசு விரைவு பேருந்துகள் வேற லெவல் தரத்தில் உள்ளன. […]
Setc

You May Like