fbpx

உச்சத்தில் இருந்த போது டஃப் கொடுத்த 2 நடிகர்கள்.. படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க சொன்ன ரஜினி..

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் என்று கருதப்படும் ரஜினி, கமல் இருவரும் 80, 90களில் கொடிகட்டி பறந்தவர்கள்.. இருவரும் மாறி மாறி ஹிட் படங்களை கொடுத்து வந்தனர்.. இன்று வரை ஹீரோவாகவே நடித்து வருகின்றனர்.. ஆனால் ரஜினி, கமலுக்கு சமமாகவே அப்போது 2 நடிகர்கள் உச்சத்தில் இருந்தனர்.. ஆம்.. ராஜ்கிரண், ராமராஜன் என்ற இரு நடிகர்களின் பார்த்து ரஜினி, கமல் இருவருமே மிரண்டு போனதாக அப்போது பரவலாக பேசப்பட்டது.. கிராமத்து கதையம்சத்துடன் இவர்கள் நடித்த படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது..

உதாரணமாக ராமராஜனின் கரகாட்டகாரன் படம் பல வாரங்களை கடந்தும் ஹவுஸ் புல்லாக ஓடியது.. இதே போல் ராஜ்கிரணின் அரண்மனை கிளி, என் ராசாவின் மனசிலே போன்ற படங்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.. மேலும் 90 களில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகரும் ராஜ் கிரண் தான்.. ரஜினி, கமலுக்கு அப்போது ரூ.80 லட்சம் தான் சம்பளமாம்..

இந்த சூழலில் ரஜினியே ஒருமுறை ராஜ்கிரணுக்கு போன் செய்து, அவர் நடித்த படத்தின் தள்ளி வைக்க முடியுமா என்று கேட்டாராம்.. காரணம்.. ரஜினி படமும், ராஜ்கிரண் படம் ஒரே நாளில் வெளியாவதாக இருந்ததாம்.. ராஜ்கிரண் படத்தினால் தனது படம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரஜினி இவ்வாறு கேட்டதாக கூறப்படுகிறது.. அந்த அளவுக்கு ராஜ்கிரணும், ராமராஜனும் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தார்களாம்..

ஆனால் பின்னாளில் ராமராஜன், ராஜ்கிரண் இருவரும் மார்க்கெட்டை இழந்துவிட்டனர்.. ராமராஜன் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில், ராஜ்கிரண் குணச்சித்திர நடிகராக தற்போதும் நடித்து வருகிறார்..

Maha

Next Post

நெல்லையில் கல்லூரி கட்டணம் செலுத்த சிரமபட்டதால்; கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை..!

Wed Jul 27 , 2022
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம், ராஜலிங்கபுரத்தில் குடியிருப்பவர் முத்துக்குமார் (53). இவர் ஒரு கூலி தொழிலாளி. முத்துக்குமாருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவரது மகள் பாப்பா (18) பொன்னாக்குடியில் உள்ள ஒரு பிரைவேட் காலேஜில் பி.எஸ்.சி. சேர்ந்துள்ளார். கல்லூரி கட்டணம் 12 ஆயிரம் ரூபாயயை முத்துக்குமார் இரண்டு தவனைகளாக செலுத்தியுள்ளார். அவர் கூலி வேலை செய்வதால் குடும்ப செலவுக்கு போதிய பணம் இல்லாமல் […]

You May Like