fbpx

’3 வருட காதல் சுக்கு நூறாக உடைந்தது’..!! கவினை தூக்கி எரிந்த பிரபல ஹீரோயின்..? அது யாருன்னு தெரியுதா..?

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் பிரபல ஹீரோக்களில் ஒருவரான கவின், சினிமா பேக்ரவுண்டு இல்லாமல் படிப்படியாக முன்னேறி இன்று ஒரு நல்ல அந்தஸ்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் தொலைக்காட்சி நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது கெரியரை துவங்கி, அதன் மூலம் நடிப்பில் கவனம் செலுத்தினார். கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமைகளை வளர்த்துக் கொண்ட கவின், சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகளை தேடி பிடித்து 2017ஆம் ஆண்டு சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்த கையேடு கவினுக்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த நிகழ்ச்சியில் பேசிய கவின், நான் தொலைக்காட்சியில் வேலை செய்து வந்தபோது என்னுடன் வேலை செய்த ஒரு பெண்ணை 3 வருடமாக காதலித்து வந்தேன். ஆனால், அந்த பெண் என்னை பிரிந்து சென்றுவிட்டார் என பெயர் குறிப்பிடாமல் கூறினார். உடனே மீடியாக்கள் அந்த பெண் நடிகை பிரியா பவானி ஷங்கர் தான் என கூறியது.

ஆனால், அது சுத்த பொய்… ஏனென்றால் பிரியா பவானி ஷங்கர் கல்லூரி படிக்கும் போதில் இருந்தே ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார். எனவே, இதற்கிடையில் எப்படி கவினை காதலிக்க முடியும்..? என்று இந்த விஷயத்தை குறித்து யூடியூபில் பேசியுள்ளார் பிரபல பத்திரிகையாளரும், சினிமா விமர்சகருமான வித்தகன் சேகர்.

Chella

Next Post

விஜய் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்..!! ஆதரவு கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்..!! ஒருவேளை அப்படி இருக்குமோ..?

Sat Jul 15 , 2023
நடிகர் விஜய் இரவு நேர பாடசாலை தொடங்குவது நல்ல விஷயம் என்று வரவேற்பு தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், இல்லம் தேடிக் கல்வியின் நோக்கமும் அது தான் என தெரிவித்துள்ளார். சென்னை பனையூரில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை அண்மையில் சந்தித்து பேசிய நடிகர் விஜய், காமராஜர் பிறந்தநாளான இன்று முதல் இரவு நேர பாடசாலை தொடங்குவது பற்றி சில அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார். அதன்படி, விஜய் மக்கள் இயக்கத்தினர் இன்று […]

You May Like