fbpx

‘#4 Years Of 96’..!! அந்த ஓர் இரவும்…. தனிப்பெருந் துணையும்..!! நினைவின் சுவடுகளை மெல்ல வருடும் 96..!!

சத்தமில்லாமல் திரைக்கு வந்து சக்கைப்போடுபோட்ட திரைப்படம் 96. நான்கு வருடங்களுக்கு முன்பு 2018ஆம் ஆண்டு இதே நாளில்தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்குகளில் வெளியானது 96. ராமும்-ஜானுவும் திரைவழியாக நம் வாழ்வில் கலந்து இன்றுடன் 4 ஆண்டுகள் கடந்துவிட்டன.

ஆர்வத்தைத் தூண்டிய தலைப்பு, விஜய் சேதுபதியின் இயல்பான லுக், மீண்டும் ‘மெளனம்’ த்ரிஷா என்றெல்லாம் ஒரு சில எதிர்பார்ப்புகள் இருந்தாலும் படத்தின் இசை, இப்படத்திற்கு வேற லெவல் ரீச்சைக் கொடுத்தது. படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தின் இசை பட்டித்தொட்டியெங்கும் பரவியது. யார் சார் இந்த இசையமைப்பாளர் என தேடியவர்களுக்கு அறிமுகமாகிக் கொண்டார் கோவிந்த் வசந்தா. எந்தப்பாட்டை ரசிக்க என்று குழப்பும் அளவுக்கு அனைத்து பாடல்களுமே உருகும் ரகமாக உருவாக்கினார். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் என்பதுபோல அனைத்துவிதமான உணர்ச்சிகளுக்கும் அப்படத்தில் பாடல் உண்டு.

'#4_Years_Of_96'..!! அந்த ஓர் இரவும்.... தனிப்பெருந் துணையும்..!! நினைவின் சுவடுகளை மெல்ல வருடும் 96..!!

தனிமை விரும்பிகளுக்கு ‘லைஃப் ஆஃப் ராம்’ பாடல், காதல் உருக ‘காதலே… காதலே’ பாடல், வசந்தகாலங்கள், தாபங்களே என ஒவ்வொரு பாட்டும் வேற லெவல். என்னதான் இருக்கு இந்தப்படத்துல என தியேட்டருக்குள் நுழைந்தவர்கள் கிட்டத்தட்ட மனமுருகியே வெளியே வந்தார்கள். சென்னையையும், தஞ்சாவூரையும் மாறி மாறி கேமராவுக்குள் கொண்டு வந்த இயக்குநர் 80’s காதலை 90களில் முன் நிறுத்தி இருப்பார். ‘மீண்டும் பள்ளிக்கு போகலாம்’ என்பது போல படம் பார்த்த பலருக்கும் மலரும் நினைவுகளான பள்ளியை தன் கண்முன்னே கொண்டு வந்தார் இயக்குநர் ப்ரேம் குமார்.

'#4_Years_Of_96'..!! அந்த ஓர் இரவும்.... தனிப்பெருந் துணையும்..!! நினைவின் சுவடுகளை மெல்ல வருடும் 96..!!

பள்ளியில் ஒரு வித ஈர்ப்புடன் உருவான காதல், காலப்போக்கில் பிரிந்துவிட மீண்டும் பல ஆண்டுகள் கழித்து அந்தப்பள்ளிக்கு செல்லும் நாயகன், தன் நினைவுகளை மீட்டெடுக்கிறான். காதல் செய்த இடமான பள்ளியே இப்படியான நினைவுகளை சுமக்கும்போது காதலித்தவள் என்ன செய்வாளோ என்ற ஏக்கத்தை நம்முள் கடத்தும்போது, ரீயூனியன் என்ற கதைப்போக்கில் த்ரிஷா வந்து நிற்பார். காலத்தால் பிரிந்த இரண்டு காதலர்களை மீண்டும் காலம் ஒன்றுசேர்க்க, இதுதான் ரியாலிட்டி என்ற க்ளைமேக்சுடன் முடிவடையும் 96.

'#4_Years_Of_96'..!! அந்த ஓர் இரவும்.... தனிப்பெருந் துணையும்..!! நினைவின் சுவடுகளை மெல்ல வருடும் 96..!!

நீண்ட வருடங்களுக்கு பிறகு தனக்குப்பிடித்த ஒருவருடன் மனம்விட்டுப்பேசி சிரிக்க ஒரு இரவாக அந்தப்படம் ஒரு இரவில் நடந்து முடிவதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதயத்தில் கைவைத்ததும் பீல் ஆவது, விளக்கொளியில் காற்றில் கரையும் யமுனை ஆற்றிலே பாடல், ரொம்ப தூரம் போய்ட்டியா ராம் என்ற வசனம் ஏற்படுத்தும் வலி என 96 கொடுக்கும் உணர்வு அலாதியானது.

'#4_Years_Of_96'..!! அந்த ஓர் இரவும்.... தனிப்பெருந் துணையும்..!! நினைவின் சுவடுகளை மெல்ல வருடும் 96..!!

96 படத்தை தன் பள்ளி நண்பர்களின் ரியூனியனின் உண்மைக்கதையை கருவாகக் கொண்டே இயக்குநர் பிரேம் உருவாக்கினார். தான் அந்த ரியூனியனில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், ரியூனியனில் 2 காதலர்கள் சந்தித்துக்கொண்ட கதையை சக நண்பர்கள் கூறியுள்ளனர். பின்ன, உடனே இந்த கதையை எழுதியுள்ளார் இயக்குநர். அதுவும் 2015ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் வீட்டில் சிக்கிக்கொண்ட நேரத்தை பயன்படுத்திக்கொண்ட ப்ரேம், வெறும் 20 நாட்களில் எழுதி முடிந்த கதை தான் 96. தமிழில் ஹிட்டடித்த இப்படம் தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. 4 ஆண்டுகள் ஆனாலும் இன்று பார்த்தாலும் ஏதோ ஒரு வித நினைவின் சுவடுகளை மெல்ல வருடும் மயிலிறகாவே 96 இருக்கிறது. அதுதான் அப்படத்தின் வெற்றியும் கூட…

Chella

Next Post

உத்தரகாண்டில் மலையேறும் வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி...

Tue Oct 4 , 2022
உத்தராகண்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 30 வீரர்களில் 10 பேர் உயிரிழந்துவிட்டதாக வரும் தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் திரௌபதி கா தண்டா – 2 என்ற சிகரத்தில் உத்தரகாசி பகுதியில் நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 29 வீரர்கள் மலை ஏறச் சென்றனர். அப்போது பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 30 பேரும் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து எஸ்.டி.ஆர்.எஃப் ராணவம் மற்றும் ஐ.டி.பி.பி. பணியாளர்களால் மீட்பு […]

You May Like