நடிகர் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வசூல் சாதனை நிகழ்த்திய ‘சூரிய வம்சம்’ திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை லாவண்யா. அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த பத்ரி, கமல்ஹாசன் நடித்த தெனாலி, ரஜினிகாந்த் நடித்த படையப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பல திரைப்படங்களிலும் நடித்தும், அழுத்தமான கதாபாத்திரம் கிடைக்காததால் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில், தற்போது நடிகர் லிவிங்ஸ்டன் மகள் நாயகியாக நடித்து வரும் அருவி சீரியலில் லட்சுமி என்கிற வேடத்தில் நடித்து வருகிறார்.

40 வயதிற்கு மேலாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த இவருக்கும், பிரசன்னா என்கிற தொழிலதிபருடன் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன், திருப்பதியில் திருமணம் நடந்துள்ளது. இவரின் திருமணத்தில், அருவி சீரியல் குழுவினர் பலர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். மேலும், இவரின் திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்களும் மனதார தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.