fbpx

நடிகர் பார்த்திபனுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு ..யாரால் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் , மீனா, நெப்போலியன் , ஐஸ்வர்யா ஆகியோர் நடித்த எஜமான் திரைப்படத்தை ஏ.வி.எம். நிறுவனம் தான் தயாரித்திருந்தது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது முக்கிய காட்சியில் ஐஸ்வர்யா நடிக்க வேண்டியிருந்ததால் ஐஸ்வர்யா பார்த்திபன் இயக்கிக் கொண்டிருந்த உள்ளே வெளியே என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் எஜமான் திரைப்படத்திலும் காட்சியை படமாக்க வேண்டிய நாட்களில் பார்த்திபனின் படத்தில் நடிக்க கால் ஷீட் இருந்துள்ளது. தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணனன் பார்த்திபனிடம் கேட்டு கால்ஷீட்டை வாங்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது. எனவே ஏ.விஎம். சரவணனன் பார்த்திபனிடம் சென்று பேசினார்.

இவரே வந்து நம்மிடம் கேட்கின்றாரே என நினைத்த பார்த்திபன் ஐஸ்வர்யாவின் 3 நாட்களுக்கான கால்ஷீட்டை கொடுத்துவிட்டார். அதற்கு பின்னர் எஜமான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது ஆனால் இதனால் பார்த்திபனுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது.

இதை ஈடுகட்ட ஏ.வி. சரவணனன் நனைத்தார். எனவே பார்த்திபனை அழைத்து குறிப்பிட்ட தொகை தந்து அதை சரி செய்தார். இந்நிலையில் படம் வெளியாகி செம்ம ஹிட் ஆனது . வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது. அதில் பார்த்திபன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வை குறிப்பிட்டு மேடையில் நடிகர் ஏ.வி.எம்.  பேசினார்.

ஐஸ்வர்யாவின் கால் ஷீட்டை கொடுத்ததால்தான் இத்திரைப்படம் திட்டமிட்ட நாட்களில் முடிக்க முடிந்தது. பெரிய வெற்றியும் அடைந்தது. அவர் கால் ஷீட் கொடுக்கமாட்டேன் என கூறி இருந்தால் தாமதம் ஏற்பட்டிருக்கும் என்றார். இந்த பேச்சை கேட்டு நெகிழ்ந்த பார்த்திபன். பின்னர் ஒரு பேட்டியில் அதை கூறினார். எனக்கு அவர் இழப்பீடாக பணம் தந்தார் பணம் உள்ளது அதனால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என நினைத்தேன். ஆனால் மேடையில் அவர் பேசியபோதுதான் மிகப்பெரிய மனம் கொண்டவர் என்பதை புரிந்து கொண்டேன் என்றார்.

Next Post

ஆசிரியர்களுக்கு அருமையான நியூஸ் : வயது உச்சவரம்பு உயர்வு .. எத்தனை ஆண்டுகள் தெரியுமா ?

Thu Oct 20 , 2022
ஆசிரியர் தேர்வு வாரிய நியமனத்தில் ஆசிரியர்களுக்கான வயது உச்சவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவலாக தீபாவளிக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் நியமனத்தில் பொதுப்பிரிவினரின் வயது உச்ச வரம்பு 40-ல் இருந்து 45 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதர பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் அரசு பள்ளியில் பணி புரியும் […]

You May Like