fbpx

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் கைப்பட எழுதிய கடிதம்..!! என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா..?

நடிகர் விஜய், கடந்த ஜூன் 17ஆம் தேதி தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த 1339 மாணவ – மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்திருந்தார். அதேபோல் விஜய் இந்த விழாவில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசியிருந்தார்.

குறிப்பாக பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறியதும், ஓட்டு போட பணம் வாங்கக் கூடாது என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கும் பல அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களின் வரவேற்பை தெரிவித்திருந்தனர்.

இது ஒரு புறம் இருக்க லியோ படத்தில் இடம் பெற்ற நா ரெடி தான் என்னும் பாடல் வெளியாகி பல சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக இதில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி இருப்பதால் உச்ச நடிகர் இப்படியொரு செயலில் ஈடுபடலாமா என பல அரசியல் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மற்றொரு புறம், விஜய் தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தன்னுடைய கைப்பட ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கடந்த ”ஜூன் 22 அன்று எனது பிறந்த நாளில் மக்கள் இயக்கம் வழியாக நீங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை நான் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களன் ஊடாக அறிந்தேன். எங்களது சிறப்பான செயற்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்” என்று அவர் எழுதியுள்ளார்.

Chella

Next Post

என்னடா இது அதிசயம் திருமணமான மறுநாளே குழந்தை பெற்ற மணமகள்…..! அதிர்ச்சியில் உறைந்த மணமகன் குடும்பத்தார்….!

Sat Jul 1 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பெற்றோர் பார்த்து பேசி முடித்த தெலுங்கானா மாநிலம் ஜெகந்திராபாத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 26 ஆம் தேதி திருமணம் நடந்தது. அன்றைய தினம் இரவே மணமகள் தனக்கு வயிறு வலிப்பதாக தெரிவித்ததால் மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மணமகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அந்த மணப்பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் அவர் 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும், அவருக்கு […]
’இளைஞர்களே இளம்பெண்களே’..!! திருமண மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி..? சைபர் கிரைம் எச்சரிக்கை..!!

You May Like