ஹன்சிகாவின் திருமணம் நடந்து ஒரு வாரம் கடந்த நிலையில், அவரது சகோதரர் தனது மனைவியை பிரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஹன்சிகா மோத்வானியின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி. திருமணமான ஒரு வருடத்தில் தனது மனைவியான நடிகை முஸ்கான் நான்சியை பிரிந்துளார். இருப்பினும், அவர்கள் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடந்த ஹன்சிகாவின் பிரம்மாண்ட திருமணத்தில் கூட நடிகை முஸ்கான் பங்கேற்கவில்லை. ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி, முஸ்கான் நான்சியை மார்ச் 21, 2021 அன்று திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே, தனது திருமண புகைப்படங்களை கூட சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கியுள்ளார் முஸ்கான்.

நவம்பர் 2, 2022ஆம் தேதி, முஸ்கான் தான் ஃபேஸ் பாரலைஸிஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். அதன் சில படங்களையும் பகிர்ந்துக் கொண்ட அவர், கடந்த சில மாதங்களில் தான் எதிர்கொள்ளும் சிரமங்களையும் குறிப்பிட்டிருந்தார். அதோடு ஒரு நடிகையாக தினமும் வீங்கிய முகத்துடன் எழுந்திருப்பது மனதை எவ்வளவு காயப்படுத்துகிறது தெரியுமா? எனவும் கூறியிருந்தார். பிரசாந்த் மார்ச் 2020-ல் முஸ்கானிடம் காதலை தெரிவித்திருக்கிறார். இவர்களின் திருமண விழாக்கள் மார்ச் 18, 2021 அன்று தொடங்கியது. பிரமாண்டமாக நடந்த இந்தத் திருமணத்தின் படங்களை சமூக வலைதளங்களில் ஹன்சிகா பகிர்ந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.