23 வருடத்திற்கு முன் நடிகர் பார்த்திபனிடம் வாங்கிய கடனை இப்போது திருப்பிக் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை மும்தாஜ்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ’மோனிஷா என் மோனலிசா’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ். இதை தொடர்ந்து இவர் பலர் படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது, இவர் கவர்ச்சி நாயகியாக நடித்த குஷி, ஸ்டார், போன்ற படங்கள் தான். பின்னர் ரோஜாக்கூட்டம், ராஜாதி ராஜா திரைப்படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இழந்த மும்தாஜ், முழுவதுமாக திரையுலகில் இருந்து விலகினார். மேலும் ரீ- என்ட்ரி கொடுக்கும் முயற்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, தன்னுடைய விளையாட்டை விளையாடினாலும், ஓவர் ஸ்டிரிக்ட் ஆபிஸராக இருந்ததால், குறைவான வாக்குகளுடன் வெளியேறினார்.

இந்நிலையில் மும்தாஜ் 23 வருடங்களுக்கு முன், நடிகர் பார்த்திபன் தன்னுடைய கஷ்டத்திற்கு உதவிய போது… அதை நினைவில் வைத்து அந்த கடனை திருப்பிக் கொடுத்துள்ளார். மேலும், சரியான நேரத்தில் நீங்கள் எனக்கு உதவி செய்துள்ளீர்கள். நீங்கள் மிகவும் நேர்மையான மனிதர். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கடவுள் ஆசீர்வதிப்பார். என கூறியுள்ளார் இவருடைய இந்த செயல் அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது. மேலும், இதுகுறித்து நடிகர் பார்த்திபனும், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்… ‘திருப்பித் தருவது-திருப்தி தருவது என்பதை உணர்த்தியவரின் இப்பதிவில் ‘நாளை’ என்பதன் தத்துவத்தை உணர்த்துகிறார். தொடர்ந்தால் யாவும் ஒருவேளை முடிந்தால் சாவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதை ஆழமாக சொல்கிறார்.

மனிதர்களை நேசிப்பதோடு வாசிக்கவும் செய்பவன் நான் என்பதால் எனக்கு தெரிவதை தெளிவதை யாவருக்கும் சொல்ல விரும்புகிறேன்! தினமும் ஒரு நல்லது செய்ய முயற்சிக்கிறேன். இன்றும் செய்தேன். அதையெல்லாம் நான் சொல்வதில்லை. அவையாவும் அகத்தின் vacuum cleaner. பெருமையேத் தவிற, தற்பெருமையோ தம்பட்டமோ அல்ல அப்படியிருக்க இதில்…நான்/நாம் கற்றுக்கொள்ளும் மனித வாழ்வின் உன்னதமே..! என கூறியுள்ளார்.