fbpx

ஹிஜாப்புக்கு எதிர்ப்பு..!! ஆடைகளை கழற்றி அரை நிர்வாணமாக வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை..!!

ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆடைகளை கழைந்து அரை நிர்வாண வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஈரானில் 9 வயது சிறுமி முதல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கபட்டுள்ளது. கடந்த செப்.13ஆம் தேதி குர்திஸ்தான் மாகாணத்தில் மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று கைது செய்யப்பட்டார். மேலும், போலீசார் அவரை கடுமைமாக தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற அவர் செப்.16 ஆம் தேதி உயிரிழந்தார். ஹிஜாப் முறையாக அணியவில்லை என்று போலீசார் தாக்கியதில் இளம் பெண் உயிரிழந்ததால் நாடு முழுவதும் கடும் போராட்டம் வெடித்தது. ஈரானில் நடக்கும் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் பிரபலங்கள் பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், ஈரான் ஹிஜாப் மீதான நடவடிக்கையில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று தெரிவித்து போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹிஜாப்புக்கு எதிர்ப்பு..!! ஆடைகளை கழற்றி அரை நிர்வாணமாக வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை..!!

இந்நிலையில், ஈரான் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை எல்னாஸ் நோரூசி, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆடைகளை கழைந்து அரை நிர்வாண வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ஒரு பெண்ணை ஒரு குறிப்பிட்ட வழியில் ஆடை அணியச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று பேசியுள்ளார். அவர் தனது வீடியோ மூலம் நிர்வாணத்தை விளம்பரப்படுத்தவில்லை, ஆனால் தேர்வு சுதந்திரத்தை மட்டுமே ஊக்குவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஹிஜாப்புக்கு எதிர்ப்பு..!! ஆடைகளை கழற்றி அரை நிர்வாணமாக வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை..!!

ஒவ்வொரு பெண்ணும், உலகில் எங்கிருந்தாலும், எங்கிருந்து வந்தாலும் அவள் விரும்பியதை அணிய உரிமை வேண்டும். எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் அவளை விமர்சிக்கவோ, தீர்மானிக்கவோ அல்லது வேறுவிதமாக ஆடை அணியச் சொல்லவோ உரிமை இல்லை. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன. அவைகள் மதிக்கப்பட வேண்டும். ஜனநாயகம் என்றால் முடிவெடுக்கும் அதிகாரம்… ஒவ்வொரு பெண்ணும் தன் உடலைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றிருக்க வேண்டும் என்று நடிகை எல்னாஸ் நோரூசி தெரிவித்துள்ளார். மேலும், அவர் அணிந்திருந்த ஆடைகளை ஒவ்வொன்றாக அவர் கழட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஆனால், அந்த வீடியோ தற்போது இன்ஸ்டாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

படிக்க வந்த மாணவனிடம் நெருக்கம் காட்டிய டியூஷன் டீச்சர்..!! அந்தரங்க ஆடியோவால் சிக்கிக் கொண்டது எப்படி?

Thu Oct 13 , 2022
அம்பத்தூரில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை தொடர்பாக, அவரை காதல் வலையில் வீழ்த்திய டியூஷன் டீச்சரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வரும் ஷர்மிளா, பள்ளி முடிந்து மாலை நேரத்தில் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். இவரிடம் அதேப்பகுதியை சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகின்றனர். அதேசமயம், கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் […]
படிக்க வந்த மாணவனிடம் நெருக்கம் காட்டிய டியூஷன் டீச்சர்..!! அந்தரங்க ஆடியோவால் சிக்கிக் கொண்டது எப்படி?

You May Like