அந்த நாட்கள் வேதனையானவை என்று விஜய் தேவரகொண்டா படத்தில் நடித்த நாட்களை குறிப்பிட்டு ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார்.
விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் டியர் காம்ரேட். தெலுங்கு படமான இது தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை என்றாலும் விமர்சனம் ரீதியாக பாராட்டுக்களை அள்ளியது.

இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகாவின் முத்தக்காட்சி பேசும் பொருளானது. இணையத்தில் இதுக் குறித்த ட்ரோல்கள், மீம்ஸ்கள் பல வெளியாகி இருந்தன. இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி அளித்துள்ளார்.
டியர் காம்ரேட் படத்தில் துணிச்சலாக அந்த சீசனில் நடித்திருந்த ராஷ்மிகா பல ட்ரோல்களை சந்தித்த பின்பு அதிலிருந்து வெளியே வர கடினமாக இருந்ததாக கூறியுள்ளார். அந்த பேட்டியில் இதுக் குறித்து அவர் கூறியிருப்பதாவது ” அந்த சமயத்தில் இதுப்பற்றி பல வேதனையான நிகழ்வுகளை சந்தித்தேன். கவலை தரும் பல செய்திகளை இதுப்பற்றி படித்தேன். அந்த நாட்கள் எத்தனை வேதனையானவை. வாழ்க்கையின் மோசமான நாட்கள் அவை” என மந்தனா தெரிவித்துள்ளார்.