fbpx

‘V’ சென்டிமென்ட்டை விடாத அஜித்..!! AK62 படத்தின் டைட்டில் இதுதான்..!! ரசிகர்கள் குஷி..!!

அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 62-வது படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் அண்மையில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஜன.11-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்தும் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் தனது 62-வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. பின்னர், இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதை அடுத்து, அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

உழைப்பாளர் தினமான இன்று, அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு AK62 படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘விடாமுயற்சி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள AK62 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய வரிசையில் தற்போது விடாமுயற்சி என தனது ‘V’ சென்டிமென்ட்டை நடிகர் அஜித்குமார் தொடர்வதால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Chella

Next Post

விழுப்புரம் கடலூரில் முதல்வரின் ஆய்வை தொடர்ந்து அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்….! பரபரக்கும் அதிகாரிகள்…..!

Mon May 1 , 2023
கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஒரு சில திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்த முதலமைச்சர், தேவையற்ற தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அறிவுறுத்தினார். இத்தகைய நிலையில், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் […]

You May Like