fbpx

துப்பாக்கியுடன் அஜித்..!! ‘ஏகே 61’ படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!!

நடிகர் அஜித்தின் ‘ஏகே 61’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

‘வலிமை’ படத்தைத் தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘ஏகே 61’. இப்படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அஜய், சிபி சந்திரன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மிக நீண்ட நாட்களாக படத்தின் அப்டேட் வெளிவராத நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று வெளிவரலாம் என்று தகவல்கள் வெளியானது. ‘துணிவே துணை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாவும் கூறப்பட்டது.

துப்பாக்கியுடன் அஜித்..!! ‘ஏகே 61’ படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!!

இந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘துணிவு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் அஜித் துப்பாக்கியுடன் நாற்காலியில் சாய்ந்து ரிலாக்ஸாக இருப்பதுபோன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

Chella

Next Post

இரண்டு ஐ.டி. நிறுவனங்களில் வேலை … 300 பேரை அதிரடியாக வெளியேற்றியது விப்ரோ …

Wed Sep 21 , 2022
மிகப்பெரிய ஐ.டி.நிறுவனமான விப்ரோ 300 பணியாளர்களை வேலையில் இருந்து அதிரடியாக வெளியேற்றியுள்ளது. விப்ரோவின் போட்டி நிறுவனங்களுடன் ஐடி பொறியாளர்கள் வேலை பார்ப்பதாக நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. கொரோனாவின்போது நிறைய ஐ.டி. நிறுவனங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் திட்டத்தை கொண்டு வந்தது. இதனால் அனைவருக்கும் பாதுகாப்பாக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சிலர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இந்த நிறுவனத்திலும் வேலை பார்த்துக் கொண்டு சம்பளம் […]
ஊழியர்கள் வேறு வேலைக்கு மாற என்ன காரணம்..? 80% பேர் இதை தான் சொல்கிறார்கள்..!!

You May Like