தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரது காமெடிக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளனர். இவரது காமெடி காட்சிகளை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் இப்போதும் உலா வருகிறது. சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்த இவர், தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
மேலும், சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த ’மாமன்னன்’ படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார் வடிவேலு. இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். அதிலும் வடிவேலுவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், தற்போது வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், வடிவேலுவுக்கு சென்னையில் மட்டும் 2 கோடி மதிப்புள்ள 2 வீடுகள் உள்ளது. அதுமட்டுமின்றி இரண்டு ஆடி கார்கள், பிஎம்டபிள்யூ, டொயோடோ என 4 சொகுசு கார்கள் உள்ளன.
மேலும், வடிவேலுக்கு மதுரையில் ஒரு வீடும், 20 ஏக்கர் நிலமும் உள்ளது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது வடிவேலுவிடம் மொத்தாமாக ரூ. 130 கோடி மதிப்புள்ள சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது.