சின்னத்திரையில் சாற்றேற குறைய 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளனியாக பணியாற்றி வருபவர் தான் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சிக்கு வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்த இவர், மறுபடியும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக வருகை தந்தார். சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சி முடிவுற்றது.

இந்த சூழ்நிலையில், தொகுப்பாளினி அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில் பிறந்தநாள் வாழ்த்து உடன் தன்னுடைய தங்கையுடன் ஒன்றிணைந்து சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அர்ச்சனா வெளியிட்டுள்ளார். இதில் அர்ச்சனாவின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் இது நம்ம தொகுப்பாளினி அர்ச்சனாவா? என்று வியப்புடன் கேட்டு வருகிறார்களாம்.