நடிகை அனுஷ்கா ஷெட்டி கர்நாடகாவை சேர்ந்தவர். இவர், யோகா டீச்சராக தனது கெரியரை துவங்கினார். அதன் பின்னர் பின்னணி பாடகியாக சினிமாவில் நுழைந்தார். அதன் பின்னர் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த 2005ஆம் ஆண்டு இவர் நடித்த முதல் திரைப்படம் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படம் தான். அதன்பிறகு, 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார்.
இதுவரை 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அனுஷ்கா நடித்துள்ளார். ஆரம்பத்தில் கவர்ச்சி தாராளமாக காட்டி நடித்த அனுஷ்கா, அருந்ததி திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பிறகு அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அருந்ததி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது.
தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த அவர், வரலாற்று வெற்றி திரைப்படமான பாகுபலி படத்தில் நடித்து உலகம் முழுக்க பிரபலம் ஆனார். அந்த படத்தில் நடித்தபோது பிரபாஸ் உடன் காதல் வயப்பட்டு சில வருடம் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்துவிட்டார்கள். இதற்கிடையே, பிரபாஸ் இந்தி பட நடிகை கிருத்தி சோனோனை காதலித்து வருகிறார். விரைவில் அவரை திருமணம் செய்யவுள்ளார்.
ஆனால், அனுஷ்கா ஷெட்டி 42 வயது ஆகியும் காதலனும் இல்லாமல் கல்யாணமும் ஆகாமல் இருந்து வருகிறார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், ”அனுஷ்கா பிரபாஸை பிரிந்ததற்கு காரணம் வேறு தொழிலதிபருடன் அனுஷ்கா தொடர்பில் இருந்தது தான் என்றும் திருமணம் வரை சென்று பின் பாதியிலேயே தடையானதால் சோகத்தில் அனுஷ்கா இருந்தார். மேலும் உடல் எடையை ஏற்றியதாலும் உயரம் 6 அடிக்கும் மேல் இருப்பதாலும் மாப்பிள்ளை அவருக்கு கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அரியனையில் ஏறிய தேவசேனாவுக்கு திருமண மேடை இனிமேல் ஏறுவதற்கு வாய்ப்பில்லை” கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.