fbpx

அடேங்கப்பா..!! ’கட்டிப்புடி கட்டிப்புடிடா’ மும்தாஜின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? வாயடைத்துப் போன ரசிகர்கள்..!!

1980ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பிறந்த மும்தாஜ், சிறுவயதில் மும்பையில் தான் வளர்ந்தார். நடிகை ஸ்ரீதேவி தான் இவருக்கு மிகப்பெரிய ரோல் மாடலே. ஸ்கூல் படிக்கும் போதே தனது அறை முழுக்க ஸ்ரீதேவியின் புகைப்படங்களை தான் ஒட்டி வைத்திருப்பேன் என அவரே கூறியிருக்கிறார். மும்பையில் உள்ள ஃபிலிமிஸ்தான் ஸ்டூடியோவை பள்ளி வாகனம் கடக்கும் போதெல்லாம் கொக்குப் போல இவரது கழுத்து திரும்பி நடிகர்கள் மற்றும் நடிகைகள் யாராவது தெரியுறாங்களான்னு பார்ப்பாராம். அந்த ஆர்வம் தான் 19 வயதில் மோனிசா என் மோனாலிஸா படத்தில் நடிக்க டி. ராஜேந்தர் அணுகியதும் ஓகே சொல்லி உள்ளார் மும்தாஜ்.

மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக, குஷி, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, ஸ்டார், வேதம், சாக்கலேட், ரோஜாக் கூட்டம், மகா நடிகன், குத்து, செல்லமே, வீராசாமி, கடைசியாக தமிழில் 2009ஆம் ஆண்டு வெளியான ராகவா லாரன்ஸின் ராஜாதி ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  விஜய்யுடன் குஷி படத்தில் இடம்பெற்ற அந்த “கட்டிப்புடி கட்டிப்புடிடா”, ஸ்டார் படத்தில் “மச்சினியே மச்ச மச்சினியே”, சாக்லேட் படத்தில் “கொக்கர கிரி கிரி”, “மல மல மருதமலை” உள்ளிட்ட பாடல்கள் எல்லாமே வேறலெவல் ஹிட்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மும்தாஜ், கடைசியாக விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 2-இல் போட்டியாளராக கலந்து கொண்டார். சுத்தம் தான் சோறு போடும் என டாய்லெட் சுத்தம் பண்ணி ரசிகர்களை மீண்டும் கவர்ந்த மும்தாஜ், 90 நாட்கள் அந்த வீட்டில் இருந்து விட்டு 91-வது நாள் வெளியேறினார். விஷால் நடித்த செல்லமே படத்தில் விவேக் உடனான காமெடி காட்சிகளில் மும்தாஜின் அசையும் மற்றும் அசையாத சொத்துக்கள் என்ன இருக்கு என விவேக் காமெடி பண்ணியிருப்பார். பல ஆண்டுகள் சினிமாவில் கடுமையாக உழைத்த நடிகை மும்தாஜிடம் மொத்தமாக ரூ.20 – ரூ.25 கோடி சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Chella

Next Post

ஆளுநரை அவமதித்த விழா குழுவினர்….! ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு ரத்தானது வருகை….?

Wed Jul 5 , 2023
புதுக்கோட்டையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள கம்பன் கழகத்தின் 48வது ஆண்டு கம்பன் பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வரும் 14ஆம் தேதி ஆரம்பமாகி 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மாவட்ட அமைச்சர்கள் எஸ் ரகுபதி மெய்யநாதன் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மைத்துனர் டாக்டர் ஜெய் ராஜமூர்த்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, எம் […]

You May Like