காதலில் திளைத்த அட்லீ – பிரியா தம்பதி தங்களது வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு செல்லவிருக்கின்றனர்.
தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லீ, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து நான்கு ஹிட் படங்களை கொடுத்து சினிமா ரசிகர்களுக்கான பிடித்தமான இயக்குனர் வரிசையில் இணைந்தார். இப்பொழுது இந்தியாவே எதிர்பார்த்து கொண்டு இருக்கும் “ஜவான்” படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான ஷாருக்கானை அவர் இயக்குவது அனைவருக்கும் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. இயக்கம் மட்டுமல்லாம் தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து ‘A for Apple Productions’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
இயக்குனர் அட்லீ, தனது காதல் மனைவி பிரியாவை கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி கரம்பிடித்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகளின் காதல் வாழ்கை, இவர்களை தாண்டி ரசிகர்களுக்கும் வியக்கும் வண்ணம் இருக்கிறது. இவர்களது காதல் வாழ்க்கையின் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகும் போது, அதை பார்த்த ரசிகர்கள், அவர்களது காதலை கண்டு சந்தோசத்தில் பூரிக்கும் நிகழ்வுகளும் நடந்து இருக்கிறது. இப்படி காதலில் திளைத்த இந்த தம்பதி தங்களது வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு செல்லவிருக்கின்றனர். தங்களது குடும்பத்திற்கு புதிதாக ஒரு உறுப்பினரை சேர்க்க போகும் மகிழ்ச்சியில் இருவரும் திளைத்து இருக்கின்றனர்.
பலவித உணர்வுகள் மேலோங்கி இருக்கும் இந்த தருணத்தில், இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா அட்லீ இருவரும் பெற்றோர்கள் ஆக போகிறார்கள். எங்களுக்கு கொடுத்த இந்த அன்பையும் ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் எங்கள் குழந்தைக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும் என் கூறி இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் “சந்தோஷத்தின் குவியலை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரபோவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அந்த தருணத்தை காண நாங்கள் ஆவலாய் காத்து கொண்டு இருக்கிறோம்” என்கிற பதிவையும் போட்டுள்ளனர்.