விஜய் டிவியில் பல எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்நிலையில், இந்த சீரியல் முடிவுக்கு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில், இறுதி நாள் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’பாரதி கண்ணம்மா’ சீரியல் தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்தது. பல எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், பாரதி கண்ணம்மாவின் குடும்ப கதையே காட்டப்பட்டு வந்தது. கண்ணம்மாவை சந்தேகப்படும் பாரதி, அவருக்கு பிறந்த குழந்தை தன்னுடைய குழந்தை இல்லை என சொல்ல, அதனால் கணவன்-மனைவி இடையே விரிசல் வருகிறது. ஆனால், பாரதி DNA டெஸ்ட் எடுத்தால் உண்மை எல்லாம் தெரிந்துவிடும்.
இருந்தாலும் DNA டெஸ்ட் எடுக்காமல் கதை கொண்டு செல்லப்பட்டது. அந்த வகையில், தற்போது பல திருப்பங்களுக்கு பின் பாரதி, ஹேமா லக்ஷ்மிக்கு DNA டெஸ்ட் எடுக்க முடிவு செய்கிறார். அதனால் இந்த சீரியல் விரைவில் முடிய இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. ஆனால் சீரியல் தரப்பில் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதனால் ரசிகர்கள் ஒரே குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியல் உண்மையாகவே முடிய இருப்பதாகவும், கடைசி நாள் படப்பிடிப்பில் பாரதி, சௌந்தர்யா, வேணு என அனைவரும் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மேலும், சீரியலின் வெற்றிக்கு காரணமாக இருந்த கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரோஷினி, இறுதி நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சீரியலை முடித்து வைத்தார் என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது.