நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விமர்சிப்பதன் மூலமும், முகம் சுளிக்க வைக்கும் கருத்துகளை தெரிவிப்பதன் மூலமும் அவ்வப்போது பயில்வான் ரங்கநாதன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.. எம்.ஜி.ஆர் முதல் ரஜினி, கமல், தொடங்கி இளம் நடிகைகள், நகைச்சுவை நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் விமர்சித்தும் வருகிறார்.. ஒரு தரப்பினர் பயில்வான் ரங்கநாதன் பேசும் வீடியோக்களை அதிகமாக பார்த்தாலும், மற்றொரு தரப்பினர் பயில்வானை கண்டித்தும் வருகின்றனர்..
மேலும் பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக பல்வேறு நடிகைகள் புகார் அளித்து வருகின்றனர்.. மேலும் ஒரு சிலர் அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் நடிகையும், மருத்துவருமான ஷர்மிளா பயில்வான் ரங்கநாதனை விமர்சித்திருந்தார்..
இந்நிலையில் தன்னை விமர்சித்த ஷர்மிளா பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ என்னை பற்றி அவதூறாக பேசிய ஷர்மிளாவை பற்றி தெரியுமா..? அவர் 3 திருமணங்கள் செய்துள்ளார்.. நான் அந்தரங்கத்தை பற்றி பேசுகிறேன் என்கிறாரே.. ஷர்மிளா எதன் மூலம் அறிமுகமானார்.. இரவு 11 மணி முதல் 1 மணி வரை நடத்திய புதிரும் புனிதமும் என்ற அந்தரங்க நிகழ்ச்சியில் தான் பிரபலமானார்.. அப்படி இருக்கையில் என்னை பற்றி பேச அவருக்கு என்ன தகுதி உள்ளது..” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.. பயில்வான் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..