fbpx

BB Tamil 7..!! பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த புது சிக்கல்..? இதற்கும் கமல் தான் காரணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ மற்ற அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் சிம்ம சொப்பனம் என கூறலாம். ஒவ்வொரு வாரமும், டிஆர்பியில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு செம்ம டஃப் கொடுத்து வருவதால், பல தொலைக்காட்சிகள் பிக்பாஸ் சமயத்தில், தங்களின் டிஆர்பி-யை தக்க வைக்க வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். அதிலும் கமல்ஹாசன் கலந்து கொள்ளும், 2 நாட்கள் தான் தாறுமாறாக டிஆர்பியை எகிறவைக்கும்.

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், 7-ஆவது சீசன் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து துவங்க உள்ளதாகவும், இதில் போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள உள்ளவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆடிஷனில் கலந்து கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, உமா ரியாஸ், KPY சரத், தொகுப்பாளர் மாகாபா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, பல திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், சீரியல் பிரபலங்கள், மாடல்கள் மற்றும் இசை கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து வெளியாகியுள்ள தகவலில், கமல்ஹாசன்… பிக்பாஸ் புரோமோ ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து முடித்து விட்டதாகவும், ஆனால் நிகழ்ச்சி துவங்குவதில் தான் சிறு குழப்பம் நிலவி வருவதாக கூறப்படுகிறது. கமல் அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்க உள்ளார். இயக்குனர் எச்.வினோத் மற்றும் ப்ராஜெக்ட் கே படத்திற்காக வெளிநாடுகளுக்கு கூட செல்ல வாய்ப்புள்ளது. அப்படி வெளிநாடுகளுக்கு சென்றால் கமல்ஹாசன் வார இறுதியில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது சாத்தியம் இல்லாத ஒன்று என்பதால், நிகழ்ச்சியாளர்களுக்குள் சிறு குழப்பம் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. 

மேலும், இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வாங்கிய சம்பளத்தை விட கமல்ஹாசன் இந்த முறை அதிக சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால், கண்டிப்பாக இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் களம் பற்றி கொஞ்சம் அதிகமாகவே கமல் பேசுவார் என தெரிகிறது.

Chella

Next Post

மாணவர்களே..!! நீங்க எதிர்பார்த்தது ரெடியா இருக்காம்..!! உங்க கைக்கு எப்போது வரும் தெரியுமா..? பள்ளிக்கல்வித்துறை சொன்ன குட் நியூஸ்..!!

Fri Jul 7 , 2023
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். அதன்படி, இந்தாண்டு சைக்கிள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக மாணவர்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் பள்ளிகளுக்கு உதிரி பாகங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இதை கோர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. குறைந்த மாணவ, மாணவியர் உள்ள இடங்களில் […]

You May Like