விஜய் டிவி ரியாலிட்டி ஷோவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஷோ என்றால், அது பிக்பாஸ் தான். 100 நாட்கள் எவ்வித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், மக்களின் ஆதரவோடு தங்களுடன் விளையாடும் போட்டியாளர்களுடன் எந்த விதமான சூழ்நிலையிலும் தாக்குப் பிடித்து தங்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய டாஸ்க் -ஆக உள்ளது.
இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து விட்ட நிலையில், தற்போது 7-வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த முறையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும், சீசன் 7-இல் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற பட்டியலை நெட்டிசன்கள் கணித்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் அப்டேட் நேற்று வெளியானது. கடந்த சீசனில் ஆரம்பிக்கலாமா என அலப்பறை கொடுத்த கமல், இந்த முறை நிசப்தமான கடலின் நடுவே நின்று கொண்டு பிக்பாஸ் சீசன் விரைவில் என அப்டேட் கொடுத்துள்ளார். இந்த வீடியோ வெளியானதும் இது ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியின் வாடை அடிக்கிறதே என சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனித்தீவில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது போல, இந்த சீசன் பிக்பாஸ் போட்டியாளர்களும் தனி தீவில் தங்க வைப்பதற்காக தான் இப்படி ஒரு ஏற்பாடா? என்கின்றனர் சிலர். எனவே, என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.