பிக்பாஸ் வீட்டில் யார் இறுதி வரை வருவார் என்ற கேள்விக்கு மகேஷ்வரி பதிலளித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறியவர் தொகுப்பாளினி மகேஷ்வரி. இவர்தான் வெளியேறுவார் என்று நெட்டிசன்கள் முன்கூட்டியே கணித்து வைத்திருந்தனர். அதேபோல், குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து மகேஷ்வரி வெளியேற்றப்பட்டார். அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருந்தார். இப்போது பேட்டி கொடுக்கவும் ஆரம்பித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு மகேஷ்வரி கொடுத்துள்ள பேட்டியில், “பிக்பாஸ் வீட்டில் விக்ரமன் கண்டிப்பாக நூறு சதவீதம் இறுதி வரை வருவார். தனா மற்றும் அசீம் இல்லாத ஒன்று விக்ரமிடம் இருக்கிறது. அது சரியான நிலைப்பாடு தான். விக்ரமன் கண்டிப்பாக பலமான போட்டியாளர்” என கூறியுள்ளார்.