fbpx

BB Tamil..!! ’எனக்கு கூச்சமாக இருந்தது’..!! வெடித்தது புதிய சர்ச்சை..!! ஆயிஷாவின் Periods குறித்து பேசிய விக்ரமன்..!!

பிக்பாஸ் வீட்டில் ஆயிஷாவின் மாதவிடாய் குறித்து விக்ரமன் பேசியதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்ஸி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். தற்போது 13 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆவார். இவர் நெல்லையை சேர்ந்தவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டது.

BB Tamil..!! ’எனக்கு கூச்சமாக இருந்தது’..!! வெடித்தது புதிய சர்ச்சை..!! ஆயிஷாவின் Periods குறித்து பேசிய விக்ரமன்..!!

அதற்குப் பிறகு விக்ரமன் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இந்நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து விக்ரமனுக்கு அதிக ஆதரவு ரசிகர்கள் கொடுத்து வந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் விக்ரமன் அதிரடியாக மாஸ் காட்டுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், சில வாரங்களாக விக்ரமன் செய்யும் செயல் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்றிருக்கிறது. ஆனால், இவர் அசீமை தாக்கி கவுண்டர் போட்டு வருகிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் எந்த ஒரு விஷயத்தையும் செய்யவில்லை. இதனால், சமூக வலைதளங்களில் விக்ரமனை பூமர் அங்கிள் விக்ரமன் என்று தான் ரசிகர்களும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

BB Tamil..!! ’எனக்கு கூச்சமாக இருந்தது’..!! வெடித்தது புதிய சர்ச்சை..!! ஆயிஷாவின் Periods குறித்து பேசிய விக்ரமன்..!!

கடந்த சில தினங்களாக விக்ரமன் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஆயிஷாவின் மாதவிடாய் குறித்து விக்ரமன் பேசியதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் உண்மை கூறும் நாற்காலியில் ஆயிஷாவை அமரவைத்து விக்ரமன் கேள்விகளை கேட்டிருந்தார். அப்போது விக்ரமன், ஆயிஷா அடிக்கடி தனது மாதவிட்டாய் பிரச்சனையை காரணம் காட்டுவதாக விக்ரமன் கூறியதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணம் நேற்றைய நிகழ்ச்சியில் ஆயிஷா, விக்ரமனை நாமினேட் செய்தபோது சொன்ன காரணம் தான். அதில் ஆயிஷா ‘அவர் எப்போதும் நியாயமாக பேசுவார் என்று தான் நினைத்தேன். ஆனால் அவருக்கு ஏதாவது ஆதாயம் இருந்தால் தான் அவர் நியாயம் பேசுவார் என்று கடந்த வாரம் தெரிந்தது. கமல் சார் எபிசோடில் என்னை உட்கார வைத்து கேள்வி கேட்டபோது நான் அவரிடம் என்னுடைய மாதவிடாய் பிரச்சனை குறித்து தனியாக பேசியதை சபையில் கேட்டது எனக்கு கூச்சமாக இருந்தது’ என்று கூறியிருந்தார்.

ஆயிஷாவின் இந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள் பலரும் விக்ரமன் ஒரு பெண்ணின் மாதவிடாய் பிரச்சனை குறித்து பேசியதை ஏன் எடிட் செய்துவிட்டார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இன்னோருபுறம் விக்ரமன் ஆயிஷாவின் mood swigs பற்றி தான் பேசினாரே தவிர அவரது மாதவிடாய் பற்றி பேசவில்லை. ஆயிஷா தான் எப்போதும் சைக்கோ போல விளையாடி வருகிறார் என்றும் கூறி வருகின்றனர்.

https://twitter.com/winsiva1994/status/1599756114597642247?s=20&t=ZnocXiw79edCWOyCzi2Dng

Chella

Next Post

கொலையான சிறுமி உயிருடன் வந்த அதிசயம்..!! 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த அப்பாவி..?

Wed Dec 7 , 2022
சிறுமியை கொன்றதாக குற்றம்சாட்டி தனது மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கிக் கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், 7 ஆண்டுகளுக்கு முன்பு அடையாளம் தெரியாத சிறுமியின் உடலை, ஒரு நபர் தனது மகன் என்று கூறி புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறுமியைக் கடத்தி கொலை செய்யப்பட்டதாக விஷ்ணு என்பவருக்கு 7 […]

You May Like