fbpx

BB Tamil..!! ‘விக்ரமனுக்கு அறிவு இருந்தா இதை மாற்றிக்கொள்ள வேண்டும்’..!! விளாசிய வனிதா

விக்ரமனுக்கு அறிவு இருந்தா எதிரியை மாற்றிக் கொள்ள வேண்டும் என வனிதா விஜயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததுமே ரேங்க் டாஸ்கின் போது ஆயிஷாவை அசீம் வாடி போடி என்று பேசியதால் கடுப்பான விக்ரமன், தானாக ஆஜராகி இப்படி பேசுவது சரியில்லை என்றும், பெண்களை தரக்குறைவாக பேசக்கூடாது என்று வியாக்காணம் பேசினார். இதனால், டென்ஷன் ஆன ஆசீம், இந்த அரசியல் பேச்சை வெளியில் வைத்துக்கொள்ளுங்கள் என்று விக்ரமனை வாடா… போடா என்று ஏக வசனத்தில் பேசினார். அசீம் பேசியது பேரும் சர்ச்சையான நிலையில், கமல்ஹாசன் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அசீமுக்கு வார்னிங் கொடுத்தார். மேலும், அசீம் ஒருமையில் பேசிய போதும், கண்ணியத்தோடு நடந்து கொண்ட விக்ரமனை கமல் வெகுவாக பாராட்டி, இப்படித்தான் ஒரு அரசியல்வாதி இருக்க வேண்டும் என்றார்.

BB Tamil..!! 'விக்ரமனுக்கு அறிவு இருந்தா இதை மாற்றிக்கொள்ள வேண்டும்'..!! விளாசிய வனிதா

இதையடுத்து, எதற்கு எடுத்தாலும் அசீம் மற்றும் விக்ரமனுக்கு இடையே தொடர்ந்து சண்டை நடந்து கொண்டு வருகிறது. பொம்மை டாஸ்கில் தனலட்சுமியை அசீம் தள்ளிவிட்டபோதும், சம்மனே இல்லாமல் விக்ரமன் ஆஜராகி அசீமிடம் சண்டை போட்டார். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஆதிவாசிகள் மற்றும் ஏலியன்ஸ் டாஸ்க் நடைபெற்றது. அந்த டாஸ்கின் போது அமுதவாணனும் அசீமும் அடிச்சி விளையாடலாமா என்றும், வா வந்து என்னை அடி என்று சண்டை போட்டுக் கொண்டனர். அப்போது அசீம், அமுதவாணனின் கன்னத்தில் கை வைத்து, தலையை திருப்பி என்னை அடி என்றார். அப்போது அமுதவாணன் என்னை அசீம் அடித்துவிட்டார் என் கூப்பாடு போட்டார்.

BB Tamil..!! 'விக்ரமனுக்கு அறிவு இருந்தா இதை மாற்றிக்கொள்ள வேண்டும்'..!! விளாசிய வனிதா

இதையடுத்து, இந்த டாஸ்கில் அசீம் மோசமாக விளையாடினார் என்றும், டாஸ்கின் போது ஒருவர் மீது கை வைப்பது சரியில்லை என்றும், இது தவறு என்று தெரிந்தும் அசீம் வாரா வாரம் லைம் லைட்டுக்காக இதை செய்து வருகிறார் என்று விக்ரம் கூறினார். அதன் பின் பேசிய அசீம், நான் லைம் லைட்டுக்காக விளையாடவில்லை, நீங்கள்தான் நான் ஸ்டாரங்கான பிளேயர் என்று தெரிந்து கொண்டு என்னை வைத்தே விளையாடுகிறீர்கள் என்று ஒருவரை ஒருவர் மாறி மாறி அசிங்கப்படுத்திக் கொண்டனர். இதையடுத்து, அசீம் மற்றும் மைனா மோசமாக விளையாடியதற்காக simply waste என்ற போர்ட் கழுத்தில் மாட்டப்பட்டது.

bigg boss

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தினமும் ரிவ்யூ கொடுத்து வரும் வனிதா, விக்ரமனின் சில செயல் எனக்கு பிடிக்கவே இல்லை. உனக்கு அறிவு இருந்தா அசீமை ஒவர் டேக் பண்ணு இல்லையா? நீ உன்னுடைய எதிரியை மாத்திக்கோ அசீமை கண்டுக்காத. அதைவிட்டு விட்டு அசீமை குறை சொல்லுவது நல்லது இல்லை. அசீம் ஸ்டாராங்கான ஆளு அவன் கூட உன்னால போட்டி போட முடியல. இதனால், அசீம் பற்றி பின்னால் பேசிக்கொண்டே இருந்தால் ஜெயிக்க முடியாது. விக்ரமன் இந்த ஸ்டேட்டர்ஜியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார் வனிதா.

Chella

Next Post

தனியார் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி கட்டுப்பாடு..!! இவர்களை பணியில் சேர்க்க தடை..!!

Sun Dec 4 , 2022
கேரளா இளம்பெண் பலாத்கார சம்பவத்தை அடுத்து வாடகை கார்கள், ஆட்டோக்களை இயக்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களை பணியில் சேர்க்க தடை விதித்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூருவில் இரவு நேரத்தில் வாடகை கார்கள், ஆட்டோக்கள், பைக், டாக்சியில் பயணிக்கும் பெண் குழந்தைகள், பெண்கள் சில சமயங்களில் அசம்பாவித சம்பவங்களை எதிர்கொள்கின்றனர். அதாவது பாலியல் தொல்லைக்கு உள்ளாகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் வாடகைகார், […]

You May Like