பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நிவாஷினி, விஜய் டிவியிடம் இருந்து வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சீசனில் அறிமுகம் இல்லாதவர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த சீசனில் தெரிந்த முகங்கள் பலர் இருக்கின்றனர். இதில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து இரண்டு வாரத்திலேயே வெளியேறினார். பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிகம் பேசப்படும் நபராக வலம் வந்தவர் அசல் கோலார். இன்டிபெண்டன்ட் இசையமைப்பாளராக பிக்பாஸ் வீட்டிற்கு வந்த இவர், அதிகமாக பெண்களிடம் பேசி அவர்களிடம் ஓவராக வழிந்தார். வந்ததுமே குயின்ஸிக்கு ரூட்டு விட்ட அசல் கோலார், அவர் வொர்க் அவுட் ஆகாததால் நிவாஷினி பக்கம் தாவினார்.

நிவாஷினியை கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பதுமாகவே இருந்தார். அதற்கு ஏற்றார்போல் அசலுடன் நெருங்கி பழகிய நிவாஷினி அவரை மடியில் படுக்க வைப்பது.. சாப்பாடு ஊட்டி விடுவது.. உள்ளிட்ட பல செயல்களை செய்தார். அசல் குறித்து ஆயிஷா நிவாஷினியிடம் சொன்னபோது கூட , ஆயிஷாவை நாமினேட் செய்து அசலுடன் நெருக்கமாக இருப்பதை உறுதி செய்தார் நிவாஷினி. அசல் கோலாரின் பின்னால் சுற்றிக்கொண்டிருந்த நிவாஷினி விளையாட்டில் கவனம் செலுத்தாமல் இருந்தார். அசல் கோலார் வெளியே சென்ற பிறகும் வீட்டி இருப்பவர்களிடம் பேசாமல் தனக்கு என்று இருக்கும் தனி உலகத்தில் வாழ்த்து வந்தார்.

இதையடுத்து நிவாஷினி குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத நிவாஷினி மீது ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ள நிவாஷினி, விஜய் டிவியிடம் இருந்து வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், நிவாஷினி ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரத்தில் இருந்து ரூ. 18 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, 42 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த நிவாஷினிக்கு ரூ.5.46 லட்சம் சம்பளாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.