fbpx

BB Tamil..!! பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்..!! ரசிகர்கள் நிம்மதி..!!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளதால், சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் விஜய் டிவியில் தினம் தோறும் ஒளிபரப்பாகிறது. இதில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றிருக்கும் 6 பேரில் யார் வெளியேற்றப்படுவார் என்பதை உறுதி செய்யும் ஓட்டிங் லிஸ்ட் தற்போது கடைசி நிமிடத்தில் அதிரடி ட்விஸ்ட் உடன் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா இருவரையும் டபுள் எவிக்ஷன் செய்து வெளியேற்றினார்கள். ஆகையால் இந்த வாரத்திற்கான எவிக்சன் குறித்த பதட்டம் போட்டியாளர்களிடம் நிலவிவரும் நிலையில், நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஜனனி, ஏடிகே, மணிகண்டன், அசீம், விக்ரமன், ரச்சிதா உள்ளிட்டோருக்கு மக்கள் இந்த வாரம் முழுவதும் ஓட்டுக்களை வழங்கினார்கள்.

BB Tamil..!! பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்..!! ரசிகர்கள் நிம்மதி..!!

இதில் நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து இப்போது வரை பிக்பாஸ் வீட்டின் கலவரங்களுக்கு காரணமாக இருக்கும் அசீம், இந்த சீசனின் கண்டன்ட் கொடுக்கும் நபராக இருக்கிறார். ஆகையால் இவருக்கும் ரசிகர்கள் நல்ல சப்போர்ட் கொடுத்து, ஓட்டுக்களையும் வாரி வழங்கி உள்ளனர். ஆகையால் இந்த 6 பேரில் அசீமுக்கு தான் அதிக ஓட்டுகள் கிடைத்து முதலிடத்தில் இருக்கிறார். இந்த சீசனில் ஓரளவு நியாயம் பேசக்கூடிய நபராக இருக்கும் விக்ரமனுக்கு 2-ம் இடமும், ஜனனி 3-ம் இடமும், ஏடிகே ஓட்டுக்களின் அடிப்படையில் 4-ம் இடமும் கிடைத்துள்ளது. இதில் கடைசி இரண்டு இடங்களை மிகக் குறைந்த ஓட்டுக்களை பெற்றிருக்கும் சீரியல் நடிகை ரக்ஷிதா மற்றும் மணிகண்டன் இவர்களுக்கிடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

BB Tamil..!! பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்..!! ரசிகர்கள் நிம்மதி..!!

இவர்களது ஓட்டு வித்தியாசம் மிக குறைவு தான். கம்மி ஓட்டின் அடிப்படையில் இந்த வாரம் இவர்கள் இருவரும் ஒருவர் வெளியிடப் போகிறார். இதில் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்த சீரியல் நடிகை ரச்சிதா குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் இந்த வாரம் எஸ்கேப் ஆகிவிட்டார். அதனால் மணிகண்டன் தான் வரம் எலிமினேட் ஆகப்போகும் நபர். கடந்த வாரம் கூட கமல் மணிகண்டனை வார்னிங் செய்தும் அவர் கேட்காமல் இப்போதும் மைனா நந்தினிவுடன் சில விஷயங்களில் ஒரு தலைப்பட்சமாக சப்போர்ட் செய்து வருகிறார். இது போட்டியாளர்கள் சிலரை பாதிக்கும் என்றும் ஆண்டவர் கடந்த எபிசோடில் குறிப்பிட்டும், அவர் அந்த குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் சளிப்படைந்த ரசிகர்கள் மணிகண்டனை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றும் முடிவுக்கு வந்துவிட்டனர். இவருடன் சேர்ந்து ஒரு தலைபட்சமாக பேசிக் கொண்டிருக்கும் நந்தினி இந்த வாரத்தின் தலைவர் என்பதால் அவரும் எஸ்கேப் ஆகிவிட்டார்.

Chella

Next Post

அட இது விடுற மாதிரி தெரியலப்பா 20ம் தேதி வரையில் 8 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Fri Dec 16 , 2022
ஏற்கனவே கடந்த ஒரு வார காலமாக மாண்டஸ் புயலின் காரணமாக, பெய்த கனமழையால் தமிழகம் பல இன்னல்களை சந்தித்திருக்கிறது.இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை குறைந்து காணப்பட்டதால் பொதுமக்களிடையே ஒரு நிம்மதி தென்பட்டது. ஆனால் மீண்டும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் […]

You May Like