பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்ட பரபரப்பை நெருங்கியுள்ளது. சென்ற வாரம் இந்த போட்டியில் இருந்து ஜனனி வெளியேறியதிலிருந்து இந்த போட்டியின் இறுதி கட்ட வரவேற்பு அந்த வீட்டிற்குள் தொற்றிக் கொண்டது.
இந்த நிலையில் தான் இந்த வாரம் யார் இந்த வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்று ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து தனலட்சுமி திடீரென்று வெளியேற்றப்பட்டார். இதனை ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்து இருக்கவில்லை.
ஆனால் ரசிகர்களில் பலர் விக்ரமன் தான் பிக் பாஸ் சீசன் 6 வெற்றியாளர் என்று தெரிவிக்கிறார்கள். அதேபோல அவரும் நன்றாகத்தான் விளையாடுகிறார். ஆனாலும் கூட மக்கள் மனதில் இருக்கும் எண்ணம் ஈடேறுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் எதிர்பாராத விதத்தில் வெளியேறிய தனலட்சுமி இந்த வீட்டில் இருந்தபோது எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு 11000 முதல் 15,000 வரையில் நாள் ஒன்றுக்கு சம்பளம் வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்றும் சொல்லப்படுகிறது. மேலும் உண்மையான தகவல் இதுவரையில் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இது ரசிகர்களின் யூகம் மட்டுமே.