பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்துவுக்கு வந்த லெட்டரை படிக்கும் காட்சிகள் ஒளிபரப்பான நிலையில், போகிற போக்கில் கமல்ஹாசன் வழக்கம்போல அரசியல் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்து இருப்பது இந்நிகழ்ச்சிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. ஏற்கனவே மக்களிடையே நன்கு பிரபலமான அவரின் நேர்மை, பரிதாபமான பேச்சு என அனைத்தும் அவருக்கான ஆர்மியை வலுவாக மாற்றியுள்ளது. ஜிபி முத்துவை தொட்டால் அவ்வளவு தான் என்கிற அளவுக்கு அவருக்கு ஆதரவான கருத்துகள் தான் இணையம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளது. இதற்கிடையே, அறிமுக நாளிலேயே ஜிபி முத்துவை அவர் கலாய்க்க நினைத்து, கடைசியில் கமலே பல்பு வாங்கினார்.

தொடர்ந்து சனிக்கிழமை ஒளிபரப்பான எபிசோடிலும் கமலை மீண்டும் ஜிபி முத்து கலாய்த்தார். ஜிபி முத்து என்றாலே அவருக்கு வரும் தபால்களை படிக்கும் காட்சிகள் தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் அவருக்கு தபால் பெட்டி வருகிறது. அதில் இருக்கும் லெட்டரில் முருங்கைக்காய் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ஒரு லெட்டரில் வெளியே வந்து நடிகரானால் எந்த 2 கதாநாயகியுடன் நீங்கள் நடிக்க விரும்புகிறீர்கள்? உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்போது தலைவரே பிக்பாஸ் வீட்டில் நீங்கள் சிங்கியா, மங்கியா, சொங்கியா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதைக்கேட்டஜிபி முத்து அப்படின்னா என்ன என்று பரிதாபமாக சக போட்டியாளர்களிடம் கேட்டார். உடனே கமல் இன்னொன்னு விட்டுட்டாங்கல்ல.. எனக்கும் அதான் தோணுச்சு என சொல்ல அமுதவாணன் சங்கி மங்கி என கூறினார். இதைக்கேட்டு பார்வையாளர்கள் தரப்பில் இருந்து கரவொலி எழுகிறது. இதற்கு ஜிபி முத்து மங்கி என தெரிவிக்கிறார். போகிற போக்கில் கமல் பாஜகவை வம்பிழுத்து பிக்பாஸ் மேடை தன் அரசியல் நையாண்டிக்குமான இடம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.