14 வயதிலேயே சினிமாவில் கதையின் நாயகியாக நடித்தவர் சுஜா வருணி. பிளஸ் 2 என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். இதுதவிர வாத்தியார், பள்ளிக்கூடம், திருவண்ணாமலை, ஐந்தாம்படை, மாஸ்கோவின் காவிரி போன்ற படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி அசத்தியிருந்தார். இவரை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட சுஜா வருணி 90 நாட்கள் வரை அதில் விளையாடி அசத்தி இருந்தார். இதையடுத்து, சிம்பு தொகுத்து வழங்கிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட அவர் 14 நாட்களிலேயே எலிமினேட் ஆகிவிட்டார்.
பின்னர் பிக்பாஸ் ஜோடிகள் என்கிற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார் சுஜா வருணி. அதில் அவர் தனது கணவர் ஷிவகுமார் உடன் ஜோடி சேர்ந்து ஆடினார். அந்நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்த ஜோடி பைனலில் அசத்தலாக நடனமாடி டைட்டிலையும் தட்டிச் சென்றது. சுஜா வருணியும் சிவாஜியின் பேரன் ஷிவகுமாரும் காதலித்து கடந்த 2019இல் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு அத்வைத் என்கிற ஆண் குழந்தையும் உள்ளது. இதையடுத்து, பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சுஜாவுக்கு அப்போது நடனமாடியதால் கருகலைந்தது.
நடிகை சுஜா வருணி சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இயங்கி வருபவர். அதில் அடிக்கடி தன்னுடைய குடும்ப புகைப்படங்களையும் பதிவிடும் அவர், தற்போது குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் சென்னையில் இருந்து இலங்கைக்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ள கார்டிலியா குரூஸ் என்கிற கப்பலில் தான் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கப்பலில் விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து நடிகை சுஜா வருணி நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன.