’வாரிசு’ படத்தில் நடிகர் விஜய்யுடன் நடிப்பதாகவும், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் நெல்சன் திலீப் குமாரின் “பீஸ்ட்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் பெற்றது. அதன்பிறகு, வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ’வாரிசு’ என்ற படத்தில் நடத்து வருகிறார். இதற்கிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில காட்சிகளும் அவ்வப்போது வெளியாகி படக்குழுவினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், அபியும் நானும் படத்தில் த்ரிஷாவுடன் சர்தார் வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். தற்போது, கடினமான போலீஸ் அதிகாரியாக உன்னை போல் ஒருவன், சித்தார்த்துடன் தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.
தற்போது அவருக்கு விஜய்யுடன் வாரிசு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வாரிசு படத்தில் விஜய்யுடன் நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளார் கணேஷ். இதையடுத்து, தனது மேக்கப் அறையில் இருந்து ஒரு சிறிய வீடியோவைப் பகிர்ந்த கணேஷ் வெங்கட்ராம், “விஜய் சாருடன் “வரிசு” படத்தில் பணிபுரிவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது மேக்கப் நேரம்!!” எனப் பதிவிட்டுள்ளார்.