கடந்த 2007ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் மகேஸ்வரி. அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், சின்னத்திரை மற்றும் சில வெள்ளித்திரை படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். வாய்ப்புகள் கிடைத்தபோது திடீரென்று இனி சினிமாவிற்குள் வரமாட்டேன் என சாணக்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று மீண்டும் சினிமா பக்கம் வந்தார். அதனைத் தொடர்ந்து மகேஸ்வரி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று விளையாடி இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்தார். இந்நிலையில், மகேஸ்வரி காதல் கண்டிஷன் அப்ளை எனும் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இதை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதையடுத்து, அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.