பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் தீபாவளியை கொண்டாடிய போது ஆயிஷா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.
பிக்பாஸில் பொதுவாக 40 நாட்களை கடந்து வரும் சண்டைகள் அனைத்தும் இந்த சீசனின் முதல் இரண்டு நாட்களிலேயே தொடங்கிவிட்டது. கடந்த வாரத்தில் அது வெடித்து சிதறியது. கடந்த வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து தனது குழந்தைகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று கூறி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக கடந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதால், நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், நேற்று தீபாவளியை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கலேபரமான டாஸ்குகள் எதையும் கொடுக்காத பிக்பாஸ் கலகலப்பான டாஸ்குகளையே போட்டியாளர்களுக்கு வழங்கினார். இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கும் வேலையிலும் ஆயிஷா உடல்நலம் சரியில்லாத காரணத்தால் சோர்வாகவே காணப்பட்டார். இறுதியில் பிக்பாஸ் பாடலை ஒலிபரப்ப மற்ற ஹவுஸ்மெட்கள் அனைவரும் மகிழ்ச்சியாக நடனமாடினர். அப்போது கார்டன் ஏரியாவில் இருந்து வீட்டிற்குள் வந்த ஆயிஷா மயங்கி விழுந்துள்ளார். அவரை மற்ற ஹவுஸ்மெட்கள் தூக்கிச் சென்றனர். மன அழுத்தம் காரணமாகவே ஆயிஷா மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.