பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் மிகவும் பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் 21 பேருடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிலையில், தற்சமயம் 70 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்த சீசன் மற்ற சீசன்களை விட சற்று விறுவிறுப்பாக தொடக்கத்தில் செல்லவில்லை என்றாலும் கூட தற்சமயம் மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
அதேபோல யார் அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என பிக்பாஸ் வீட்டில் இருக்கின்ற போட்டியாளர்கள் எல்லோரும் ஆர்வமாக விளையாடி வரும் நிலையில், சென்ற வாரம் ஜனனி வெளியேற்றப்பட்டதால் இந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய மாற்றம் உண்டானது. அந்த விதத்தில், இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த வாரம் வாக்குகளின் அடிப்படையில் மைனா நந்தினி இந்த வீட்டை விட்டு வெளியேறலாம் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.