இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஷிவின் கணேசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை 6-வது முறையாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். சுமார் 106 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் அசீம் முதலிடம், விக்ரமன் இரண்டாமிடம், ஷிவின் கணேசன் மூன்றாமிடம் பெற்றனர். இறுதிப்போட்டி வரை சென்ற திருநங்கை போட்டியாளர் என்ற பெருமையை ஷிவின் கணேசன் பெற்றார்.
இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தில் ஷிவின் கணேசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் சிறப்பு தோற்றத்தில் ஷிவான் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.