fbpx

முதல் படத்திலேயே பிரச்சனையை கிளப்பிய பிரிகிடா..! கோபத்தில் இயக்குநர் பார்த்திபன்..!

சேரி மக்கள் குறித்து அவதூறாக பேசிய இரவின் நிழல் பட நடிகை பிரிகிடா சமூக வலைதளத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் நடிகர் பார்த்திபன். இவரின் ஒத்த செருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து இரவின் நிழல் படத்தை நடித்து இயக்கியுள்ளார். இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு நான் லீனியர் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றது. இப்படம் வெளியானது முதல் தற்போது வரை பார்த்திபன், நடிகை பிரிகிடா ஆகியோர் பல திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.

முதல் படத்திலேயே பிரச்சனையை கிளப்பிய பிரிகிடா..! கோபத்தில் இயக்குநர் பார்த்திபன்..!

இந்நிலையில், பிரிகிடா தியேட்டரின் வெளியில் பேட்டி கொடுக்கும் போது ‘சேரிக்கு போனால் அந்த மாதிரி (கெட்ட) வார்த்தைகளை தான் கேட்க முடியும். அதை மாற்றி நாம் சினிமாவுக்காக ஏமாற்ற எல்லாம் முடியாது. மக்களுக்கே தெரியும் அங்கே எப்படி பேசுவார்கள் என்று” என பிரிகிடா கூறினார். சேரி மக்கள் பற்றி நடிகை பிரிகிடா பேசியதற்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இதற்கு தற்போது பிரிகிடா மன்னிப்பு கோரியுள்ளார். அதில் அவர் “இடத்தை பொறுத்து மொழி மாறும் என்பதை தான் கூற வந்தேன்..” என குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார். பார்த்திபனும் அவரது ட்வீட்டை பகிர்ந்து இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

Chella

Next Post

ரவி சாஸ்திரிக்கு ஓடிவந்து பரிசளித்த ரிஷப் பண்ட்..! என்ன தெரியுமா? வைரலாகும் வீடியோ

Mon Jul 18 , 2022
ஒருநாள் தொடர் முடிந்ததும் ரவி சாஸ்திரியிடம் ஓடி வந்து, ஷாம்பெய்ன் பாட்டிலை ரிஷப் பண்ட் கொடுத்துவிட்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. கேப்டன் […]
ரவி சாஸ்திரிக்கு ஓடிவந்து பரிசளித்த ரிஷப் பண்ட்..! என்ன தெரியுமா? வைரலாகும் வீடியோ

You May Like