fbpx

பிக்பாஸ் சீசன் 7இல் கலந்து கொள்ளப்போகும் பிரபலம்..!! புகைப்படம் மூலம் உறுதி செய்த விஜய் டிவி காமெடி நடிகர்..!!

கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, 7-வது சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். முன்னதாக, பிக்பாஸ் 7-வது சீசனுக்கான ப்ரோமோ வெளியானது. 6 சீசன்களை தொடர்ந்து 7-வது சீசனையும் உலக நாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். இதற்காக அவருக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, வழக்கம் போல இல்லாமல் இந்த முறை பிக்பாஸில் இரண்டு வீடுகள் இருக்கும் என்றும், போட்டியாளர்கள் இரண்டு பாதியாக பிரிக்கப்பட்டு தங்கவைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதை ப்ரோமோவில் கமல்ஹாசனே கூறிவிட்டார். இந்நிலையில் முன்னணி விஜய் டிவி காமெடியன் குரேஷி பிக்பாஸ் செல்வதை உறுதி செய்திருக்கிறார்.

அவர் இன்ஸ்டாவில் பிக்பாஸ் கமல்ஹாசன் போஸ்டர் முன்பு நின்று போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அதனால் அவர் பிக்ச்பாஸ் செல்வதை மறைமுகமாக உறுதி செய்து இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

"நான் கடவுளையே நம்பமாட்டேன்" ஜோதிடர்களை கேள்வி கேட்டு தெறிக்கவிட்ட நடிகர் மாரிமுத்து காலமானார்…!

Fri Sep 8 , 2023
ஜெயிலர் உட்பட பல தமிழ் படங்களில் நடித்த நடிரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். பிரபல இயக்குநர் வசந்திடம் உதவியாளராக பணியாற்றிய மாரிமுத்து, பின்னர் கண்ணும், கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் திரை உலகிற்கு இயக்குநரானார். மேலும் மருது, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து புகழ்பெற்றவர். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார், அந்த படத்தில் இவரது […]

You May Like