அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டான வாலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்ஜே சூர்யா, இப்போது நடிகராக வலம் வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த இவர், ஷங்கர் இயக்கும் RC 15 படத்தில் ராம் சரணுக்கு வில்லனாக நடித்து வருகிறார். அதேபோல் மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களிலும் பிஸியாகிவிட்டார். இந்நிலையில், எஸ்ஜே சூர்யாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் பேனரில் நடிக்க, எஸ்ஜே சூர்யாவுக்கு அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், சில காரணங்களால் எஸ்ஜே சூர்யா அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால், அவர் அந்த அட்வான்ஸ் பணத்தை ஞானவேல் ராஜாவுக்கு திருப்பிக் கொடுத்துள்ளார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த ஞானவேல் ராஜா, அட்வான்ஸ் தொகை உங்களிடமே இருக்கட்டும், பிறகு பார்த்துக்கலாம் என்று கூறியுள்ளாராம். இப்போது எஸ்ஜே சூர்யா பிஸியாகிவிட்டதால், அவரால் சொன்னபடி நடித்துக் கொடுக்க முடியவில்லையாம். இதனால், தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கேட்டுள்ளார் ஞானவேல் ராஜா. இதனால் எஸ்ஜே சூர்யாவோ தான் படம் நடித்து தருகிறேன் என்று கூறியுள்ளாராம். ஆனால், தான் இப்போது வாங்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் எனக் கூறியதால் ஞானவேல் ராஜா ஷாக்கிங் ஆகியுள்ளார். இதனால், எஸ்ஜே சூர்யா மீது அதிருப்தியான ஞானவேல் ராஜா, இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி புகார் கொடுத்தால் எஸ்ஜே சூர்யாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் எஸ்ஜே சூர்யா, ஞானவேல் ராஜா ஆகியோர் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.