fbpx

நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவிய தனுஷ்..!!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணிக்கு நடிகர் தனுஷ் ரூ.1 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் போண்டா மணி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால் அவருக்கு உதவித் தேவைப்படுவதாக நடிகரும் போண்டா மணியின் நண்பருமான பெஞ்சமின், கண்ணீர் மல்க அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கோரிக்கை வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மேலும், தொலைக்காட்சியிலும் செய்திகள் வெளியிடப்பட்டன.

நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவிய தனுஷ்..!!

இதற்கிடையே, நடிகர் விஜய் சேதுபதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், உள்ளிட்ட பலரும் அவரை சந்தித்து, அவருக்கான மருத்துவம் மற்றும் பொருளாதார உதவிகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் போண்டா மணிக்கு நடிகர் தனுஷ் ரூ.1 லட்சம் கொடுத்து அவருக்கு உதவி செய்துள்ளார். நடிகர் தனுஷ் செய்த இந்த உதவிக்கு நன்றி கூறி போண்டா மணி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..?

Sun Sep 25 , 2022
திருமலை – திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்தின் மதிப்பை தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ளார். திருமலை – திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டமானது, தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துகள் குறித்து இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 960 […]

You May Like