‘மானாட மயிலாட’ என்கிற ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் காயத்ரி. இந்நிகழ்ச்சியின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வந்த இவர், பின்னர் மெல்ல மெல்ல சீரியல்களில் நடிக்க தொடங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் என்னும் சீரியலில் நிலா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி, தாமரை, மோகினி, பிரியசகி, அழகி, பொன்னூஞ்சல், களத்து வீடு, மெல்ல திறந்தது கதவு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர், பிரபல டான்சர் யுவராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு தருண் என்கிற 12 வயது மகன் ஒருவனும் உள்ளார். அவ்வப்போது காயத்ரி தன்னுடைய மகனுடன் சேர்ந்து ரீல்ஸ் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.
இந்நிலையில், தற்போது இரண்டாவது குழந்தையை விரைவில் பெற்றெடுக்க போகும் தகவலை வெளியிட்டுள்ளார். காயத்ரி தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக, தன்னுடைய கணவர் யுவராஜுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது.