fbpx

”பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் போட்டியாளர்கள்”..!! ”மொத்த லிஸ்ட்டும் வந்தாச்சு”..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பரபரப்புக்கும், பொழுதுபோக்கிற்கும் பஞ்சமே இருக்காது என்பதால் பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கின்றனர். இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

இந்த பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் யாரெல்லாம் போட்டியாளர்களாக களமிறங்குகிறார்கள் என்பது குறித்து பல தகவல்கள் சமூக வலைதலங்களில் வலம் வருகிறது. அதன்படி, இம்முறை விஜய் டிவி பிரபலங்கள் மாகபா ஆனந்த், ஜாக்குலின், ரக்‌ஷன், கோவை பெண் ஓட்டுநர் டிரைவர் ஷர்மிளா, பயில்வான் ரங்கநாதன், நடிகர் சந்தோஷ் பிரதாப், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், காக்கா முட்டை விக்னேஷ், நடிகர் ப்ரித்விராஜ், நடிகை தர்ஷா குப்தா, உமா ரியாஸ், சோனியா அகர்வால், ரோஷினி, அம்மு அபிராமி, ரேகா நாயர், ரவீனா, நிலா மற்றும் ரச்சிதாவின் கணவர் தினேஷ், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், விஜய் டிவி காமெடி நடிகர் சரத் ஆகியோர் இந்த சீசனில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 7 போட்டியாளர்களின் பெயர்கள் உறுதியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ளவர்களின் பெயர்களும் விரைவில் உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி, விஜய் டிவி பிரபலம் மாகாபா ஆனந்த், நடிகை ரோஷினி, குக் வித் கோமாளி புகழ் ரவீணா, நடிகர் பப்லு, ப்ரித்விராஜ், நடிகை ரேகா நாயர், தர்ஷா குப்தா, நடிகை ஷகிலாவின் மகள் மிலா ஆகியோர் இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது உறுதியாகி உள்ளதாம்.

Chella

Next Post

தந்தை எஸ்.ஏ.சி.க்கு திடீர் அறுவை சிகிச்சை..!! கண்டுகொள்ளாமல் இருக்கும் மகன் விஜய்..!! கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!!

Wed Sep 13 , 2023
நடிகர் விஜய்க்கும் அவரின் தந்தைக்கும் இடையே சிறு சிறு முரண்பாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. ஆரம்பத்தில் விஜய் சினிமாவில் நடிப்பதில் எஸ்ஏசிக்கு விருப்பம் இல்லை. ஆனால், விஜய் பிடிவாதமாக இருந்ததால், அவரை சினிமாவில் நடிக்க அனுமதித்திருந்தார். இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், விஜய் இன்று உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணமே அவரின் தந்தை தான். விஜய் சினிமாவில் நுழைந்த நாளிலிருந்து அவருக்கு […]

You May Like