பொன்னியின் செல்வன் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விரைவில் அவர் உடல் குணம் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவீட்டில் , ’’ எனக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதியானது. அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி உள்ளேன். நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். என்னுடன் நெருக்கமாக பழகிய நண்பர்கள், உறவினர்களையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று டுவீட் செய்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்து அனைவரின் உள்ளங்களையும் வெகுவாகக் கவர்ந்தவர் ஜெயம்ரவி.. 500 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இப்படத்திற்காக பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகளில் ஜெயம்ரவி கலந்து கொண்டார். இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.