fbpx

”வெறித்தனம்”..!! ’லியோ’ படத்திற்காக சஞ்சய் தத் செய்யும் காரியத்தை பாருங்க..!! வைரலாகும் புகைப்படம்..!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது. த்ரிஷா. மன்சூர் அலிகான், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், இதில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால், படத்தில் சஞ்சய் தத் நடிப்பது தான். ஏனென்றால், கேஜிஎப் 2 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சஞ்சய் தத்தின் மார்க்கெட் எல்லா மொழிகளிலும் உயர்ந்துவிட்டது. எனவே, சஞ்சய் தத் லியோ திரைப்படத்தில் நடித்து வருவதால் பாலிவுட் சினிமாவிலும் லியோ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.

இந்நிலையில், லியோ படத்தில் நடிப்பதற்காக நடிகர் சஞ்சய் தத் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த பலரும் “அதீரா லியோ படத்திற்கு வெறித்தனமாக தயாராகி வருகிறாரே” என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Chella

Next Post

’இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியை வென்றால்’..!! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா..!!

Mon Feb 20 , 2023
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் இந்துாரில் மார்ச் 1ஆம் தேதி […]

You May Like