fbpx

மருத்துவமனையில் மருமகள் சமந்தா!! மாமனார் எடுத்த அதிரடி முடிவு!

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தான், மருத்துவமனையில் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து சமந்தாவின் மாமனார் நாகர்ஜுனா அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மருத்துவமனையில் நடிகை சமந்தா சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை சமூக வலைத்தலங்களில் வெளியிட்டநிலையில் அவருக்கு அனைவரும் ஆறுதல் கூறினர். நாகசைதன்யாவின் சகோதரர் முன்னாள் அண்ணியார் நலம்பெற வேண்டும் என்று ஆறுதல் கூறினார். இந்நிலையில் அவரது குடும்பத்தினரிடம் இருந்து ஆறுதல் வார்த்தைகள் வரும் என எதிர்பார்த்த நிலையில் நாக சைதன்யாவின் தம்பியைத் தவிர வேறு யாரும் எதுவும் பேசாமல்இருந்தனர்.

இந்நிலையில் சமந்தாவின் முன்னாள் மாமனார் நாகர்ஜுனா, சமந்தாவை மருத்துவமனையில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றது. எனினும் இது பற்றி அவர் தரப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. நாகசைதன்யாவை சமந்தா பிரிந்தாலும் கூட ஏற்கனவே நாகர்ஜுனா சமந்தா என் மருமகள் இல்லை, மகள் மாதிரி என கூறியிருந்தார்.

ஏற்கனவே நாகசைதன்யா குடும்பத்தினர் மீண்டும் சமந்தாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். ஆனால், நம்ம ஹீரோ நாக சைதன்யா இதற்கு ஒத்துக் கொள்ளவில்லையாம். முடிந்தது முடிந்ததுதான் என கராராக பதில் கூறிவிட்டாராம்.  இந்நிலையில் சமந்தாவுடன் நாகசைதன்யா சேர்ந்து வாழ வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

Next Post

’ஐடி கணக்கு தாக்கல் செய்ய இனி ஒரே படிவம்’..? மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிரடி..!!

Wed Nov 2 , 2022
ஐடி கணக்கு தாக்கல் செய்ய ஒரே வருமான வரி படிவத்தை அறிமுகப்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் திட்டமிட்டுள்ளது. வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு கணக்குத் தாக்கல் செய்வதற்காக தற்போது 7 வகை படிவங்கள் இருக்கிறது. இந்நிலையில், வருமான வரி செலுத்தும் அனைத்து வகையினரும் பயன்படுத்துவதற்கு எளிதான விதமாக ஒரே வருமான வரி படிவத்தை அறிமுகப்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், இது பற்றிய அறிவிப்பை மத்திய […]

You May Like