சின்னத்திரையில் நடித்து மிகவும் பிரபலமான நபர் தான் தீபா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் இரண்டாம் பாகத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். அதேபோல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கிடைத்த பிரபலத்தை வைத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அன்பே சிவம்’ சீரியலிலும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் அனைத்து சீரியல்களிலும் நெகட்டிவ் கதாபாத்திரத்திலேயே தோன்றுவதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு மகன் இருக்கும் நிலையில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமா பிரிந்து தனியாக தான் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீபாவுக்கு திருமணம் நடந்து உள்ளது. அது தொடர்பான புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் தீபாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனது திருமணத்தை பற்றி விரைவில் தீபாவே அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தீபாவின் இரண்டாம் திருமணம் பற்றி தேவையில்லாத பல்வேறு விதமான வதந்திகள் பரவியது. ஆனால், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அமைத்து காத்து வந்த தீபா தற்போது அதர்க்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த புகைப்படத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் தீபா. மேலும், தனது கணவருடன் சேர்ந்து தீபா விரைவில் தனது திருமணத்தை பற்றிய விஷயங்களை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.